கேரளாவில் ஏன் இவ்வளவு பெரிய மண் (மலைச்) சரிவுகள்?

கேரளாவில் ஏன் இவ்வளவு பெரிய மண் (மலைச்) சரிவுகள்?

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே அரபிக் கடலுக்கு கிழக்கே அமைந்துள்ள அழகான மாநிலம் கேரளா. தென் மேற்குப் பருவக்காற்றால் அதிக மழைப் பொழிவைப் பெரும் பகுதி. அங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழை சீராகப் பெய்வதாலும், அங்கே உள்ள ஆறுகள் நல்ல பாதுகாப்புடன் இருப்பதாலும் மழைவெள்ளம் எளிதாக கடலைச் சென்றடைந்து கொண்டிருந்தது. சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், கேரளாவில் சீரான மழைக்காலம் மாறி ஒரேயடியாக ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களிலேயே கொட்டித்தீர்ப்பது, இயற்கையின் சீற்றம் என்று கூறுவதைவிட, சமீபகாலத்தில் முன்னேற்றம் என்ற போர்வையில் மனிதன் இயற்கைக்கு விளைவித்த தீங்கினால் மனித இனம் அனுபவிக்கும் துன்பம் என்று கூறலாம். பெரும் மழைப்பொழிவால்

2018-இல் ஏற்பட்ட பேரழிவிலிருந்து மீளுவதற்கு முன்பு, 2019-இல் அதிக அளவு சேதத்தை கேரளத்தின் வட மாவட்டங்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு அதிக மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாக மலைகளிலிருந்து மண் அதிகமாக அரிக்கப்பட்டு, வெள்ளத்தோடு மண்ணும் வீடுகளுக்குள் புகுந்து அதிக நாசத்தை ஏற்படுத்தியது. இந்த முறை சிறுசிறு மலைக்குன்றுகள் மரத்தோடு சாய்ந்து சில கிராமங்களே முழுமையாக மறைந்து போய்விட்டன. இதற்கு சொல்லப்படும் முக்கிய காரணம் கல் குவாரிகள், கல்குவாரிகளில் கல் எடுப்பதற்காக வெடிகள் வைக்கப்படும் போது, மலைகள் வலுவிழந்து விடுகின்றன. அதிக மழைப் பொழிவின் போது, மழை மலை இடுக்குகளுக்குள் போய் அந்த மலையையே சாய்த்து விடுகிறது. இயற்கைச் சீற்றங்கள் என்பது மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை. இதை மனிதர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனில், மனித இனம் அழிந்துவிடும்.

கேரளாவைப் பொருத்தமட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவை, ஆராயும்போது மாதவ் காட்கில் (Madhav Gadgil) என்ற  சூழலியலாளர் 2011-இல் கொடுத்த ஆய்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உயிரின வாழ்க்கைக்கான உணர்மிகு பரப்புகளைக் (Ecologically Sensitive Areas (ESA))) குறித்து ஆய்வு செய்வதற்காக ‘காட்கில் தலைமையில் 2011-இல் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு கொடுத்த அறிக்கையின் நிபந்தனைகள் கொஞ்சம் கடுமையாக இருந்ததால், அதில் மாநில அரசு பல மாற்றங்களை எதிர் பார்த்தது. அதன்பின். னுச. கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழு (Panel) அமைக்கப்பட்டது. அது 2013 ஏப்ரல் 15-இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் 60,000 சதுர கீலோமீட்டர் அளவிற்கு உயிரின வாழ்க்கைக்கான உணர்மிகு பரப்பாக (37% of total area of western ghats) அறிவிக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசு, மாநில அரசை அறிவுறித்தியது. கஸ்தூரி ரங்கன் குழு மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி முழுவதையும் இரண்டாகப் பிரித்தது. ஒரு பகுதியை இயற்கை வனப்புடைய நிலப்பகுதி (Natural Landscape) என்றும் மற்ற பகுதியை பண்பாட்டு நிலப்பகுதி (Cultural Landscape) என்றும் பிரித்தது. இரண்டாவது பகுதியில் விவசாயம் செய்யலாம், குடியிருப்புகளை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்தது. காட்கில் குழு பரிந்துரையின்படி 1,37,000 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்கிலிருந்து கீழிறங்கி, கஸ்தூரி ரங்கன் கமிட்டி 60,000 சதுர கி.மீ. மட்டும் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்தது. மாநில அரசு அதற்கும் செவி மடுக்கவில்லை. மாநில அரசு பெயரளவில் அதை ESA என்று மட்டும் அறிவித்ததே தவிர, அதைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. காட்கில், ESA பகுதிகளை மூன்றாகப் பிரித்தார். இந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதை ஊராட்சி உள்ளூர் அமைப்புகள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்தார். இந்த இடங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைத்து பயிர் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கக் கூடாது. மண் எடுக்கக் கூடாது. வெப்ப ஆலைகளை (Thermal Plant) நிறுவக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகளை காட்கில் குழு விதித்தது.

இதற்கு மாநில அரசிடமிருந்தும், பாதிக்கப்பட்ட பண முதலைகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கைகளின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக இன்று சாமான்ய கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட கேரளத்தில் ‘கவளப்பாறை என்ற ஒரு கிராமமே அழிந்து போய்விட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை ஆறு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. அங்கே 5000-க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர இனங்கள் உள்ளன. பல ஆதிவாசிக் கிராமங்கள் அங்கே உள்ளன. கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளை அவசர அவசரமாக, 4156 கிராமங்களில் (6 மாநிலங்களில்) நடைமுறைப்படுத்த அரசுகள் முன் வந்தன. ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, நிபந்தனைகளை சரிவர நிறைவேற்ற முடியவில்லை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் புவியியல் பண்புகள்

வடக்கு எல்லை  8ஸ்19 – 21ஸ்16 (வ)

கிழக்கு எல்லை   72ஸ்56 – 78ஸ்19 (கி)

மொத்த பரப்பளவு 129037 ச.கி.மீ.

நீளம்    1490 கி.மீ.

குறைந்தபட்ச அகலம்  48 கி.மீ.

அதிகபட்ச அகலம் 210 கி.மீ.

மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பற்றிய சில தகவல்கள் :

  • இது தக்காணப் பீடபூமியின் மேற்குப் பகுதியின் ஓரமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சுமார் 1600 கி.மீ. நீளம் வரை அமைந்துள்ளது.
  • உலகில் உயிரியல் பண்முகத்தன்மை கொண்ட முக்கியமான எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.
  • இந்த மலைத்தொடர் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் எல்லைப் பகுதியில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா வரை தொடர்கிறது. இறுதியில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
  • இம்மலைத்தொடரின் சராசரி உயரம் 1,200 மீ. (3,900 அடி) ஆகும்.
  • இந்தப் பகுதியானது சுமார், 5000 வகை பூக்கும் தாவரங்களுக்கும், 139 வகை பாலூட்டிகளுக்கும், 508 வகை பறவைகளுக்கும், 176 வகை இருவாழ்விகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது.
  • மேலும் இம்மலைத்தொடரில், உலகில் வேறெங்கும் காணப்படாத 84 வகையான இரு வாழ்விகளும், 16 வகையான பறவைகளும், ஏழு வகையான பாலூட்டிகளும், 1600 வகையான பூக்கும் தாவரங்களும் வாழ்கின்றன.
  • இந்திய அரசாங்கத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் பல்வேறு பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், இரண்டு உயிர்க்கோளக் காப்பகமும் (க்ஷடைிளயீாநசந சுநளநசஎந) 13 தேசிய பூங்காக்களும் அடங்கும்.
  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகமானது 5500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட பசுமைமாறாக் காடுகளையும் இலையுதிர் காடுகளையும் உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமானப் பகுதிகளில் ஒன்றாகும்.
  • கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, இந்த மலைத்தொடரின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேலும் இப்பகுதி இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட பசுமைமாறாக் காடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
  • 2011 ஆகஸ்ட் மாதத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (றுழுநுநுஞ) (காட்கில் குழு எனவும் அழைக்கப்படுகிறது) மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதையும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்தது. மேலும் இக்குழு இந்த மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளை மூன்று முக்கிய நிலைகளில் சூழலியல் உணர்மிகு மண்டலங்களாக வகுத்துள்ளது.
  • கடந்த 2012-ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள 39 இடங்களை உலக பாரம்பரிய சின்னங்களாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (ருசூநுளுஊடீ) அறிவித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் சில முக்கிய ஆறுகள் :

1. கோதாவரி

2. காவிரி

3. கிருஷ்ணா

4. தாமிரபரணி

5. துங்கபத்ரா

6. பெரியாறு

7. பாரதப்புழா

8. பம்பா

9. சராவதி

10. நேத்ராவதி

11. மாண்டவி

12. ஜூவாரி

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சில முக்கிய சிகரங்கள் :

சிகரம்   உயரம்

ஆனைமுடி  2,695 மீட்டர்

மீசைப்புலிமலை  2,640 மீட்டர்

தொட்டபெட்டா   2,637 மீட்டர்

கொலரிபெட்டா   2,629 மீட்டர்

முக்குருத்தி  2,554 மீட்டர்

வண்டறவு   2,553 மீட்டர்

கட்டு மலை  2,552 மீட்டர்

தேவி மலை 2,523 மீட்டர்

குமரிக்கல் மலை 2,522 மீட்டர்

பெருமாள் சிகரம் 2,440 மீட்டர்

மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினர் :

1. கோத்தர் (தமிழ்நாடு)

2. படுகர் (தமிழ்நாடு)

3. குரும்பர் (தமிழ்நாடு)

4. தோடர் (தமிழ்நாடு)

5. சோளகர் (தமிழ்நாடு, கர்நாடகம்)

6. வொக்கலிகர் (தமிழ்நாடு, கர்நாடகம்)

7. சித்திஸ் (கர்நாடகம், குஜராத்)

8. பணியர் (தமிழ்நாடு, கேரளம்)

9. காட்டு நாயக்கர் (தமிழ்நாடு)

10. இருளர் (தமிழ்நாடு, கேரளம்)

11. மலைபண்டாரம் (கேரளம்)

12. காணிக்காரர் (தமிழ்நாடு, கேரளம்)