ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தேர்வு

ஐ.நா. பொதுச் செயலராக அன்டோன்யோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அந்தப் பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பார். அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும்.