வெளிநாட்டுக் கடன் பத்திரங்கள் Sovereign Bonds

இந்தியா இதுவரை உள்நாட்டுக்கடன் பத்திரங்களை மட்டுமே வெளியிட்டு நிதி திரட்டியுள்ளது. 2019-20 நிதிநிலை அறிக்கையில், வெளிநாட்டுப் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டில் அரசு கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டினால், தனியார் நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாக அரசு கருதுகிறது. அதே சமயம் பெரும்பாலான உள்நாட்டுக் கடன் பத்திரங்களால் வரும் நிதி வங்கிகள் மூலமாகவும், மத்திய ரிசர்வ் வங்கி மூலமாகத்தான் கிடைக்கிறது. எனவே வெளிநாட்டு கடன்பத்திரங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனுக்கு சரியாக வட்டி செலுத்தப்பட வேண்டும். அதுவும் அந்நியச் செலாவணியில் முதிர்ச்சி அடையும் போது மொத்தமாக திருப்பித்தரப்பட வேண்டும். அந்நியச் செலாவணியில் இது புது முயற்சி என்பதால், நமது நாட்டின் ழுனுஞஶிஇல் 5 சதவீத அளவுக்கு மட்டுமே வெளிநாட்டுக் கடன் பத்திரங்கள் மூலம் கடன் வழங்கப்படும். இது நமது மொத்தக்கடனில் 10 சதவீதமாக இருக்கும். மேலும் இது படிப்படியாக அரசின் நிதிபற்றாக்குறையைக் குறைக்கும். ஆனால் அதே சமயம் கருத்தில் கொள்ள வேண்டியது, அரசு நிதிப்பற்றாக்குறையை 4.4 சதவீத அளவில் நிறுத்தியிருந்தால், தனியார் துறைக்கு ‘ 2 லட்சம் கோடி கிடைத்திருக்கும். இந்தப் புது முயற்சியும் தேவை இருக்காது.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு, வெளிநாடுகளிலிருந்து கடன் பத்திரங்கள் மூலம் நிதிதிரட்டுவது சுலபம்தான். இது இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும். ஆனால் பல பொருளாதார நிபுணர்கள், இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளின் வழியைப் பின்பற்றுகிறதோ என அச்சம் தெரிவிக்கின்றனர். 1970-களில் இந்த நாடுகள் பெரிய அளவில் அந்நியக் கடன்களை வாங்கின. அடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டன. அந்த நாடுகளின் பணமதிப்பு வேகமாகக் குறைந்ததால், கடன் சுமை அதிகரித்து அவை படாதபாடு பட்டன. இதே நிலை இந்தியாவிற்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. இன்றைய தேதியில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஸ்ரீ 43,000 கோடி என்ற அளவில் புதிய உச்சத்தில் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பும் டாலருக்கு ‘ 70 என்ற அளவிற்கு சிறிது குறைவாகவே உள்ளது. இந்தப் பத்திரங்கள் மூலம் பெறும் அந்நிய முதலீட்டால், ரூபாயின் மதிப்பு மேலும் உயரும்.
ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்போது ஏற்றுமதி பாதிப்படையும் என்பது பொருளாதார ரீதியிலான உண்மை. அதற்கேற்ப இறக்குமதி குறைக்கப்பட வேண்டும். தங்கத்தின் மீது போடப்பட்ட 12.5 சதவீதம் (கூடுதல் 2.5ரூ) இறக்குமதி வரி மூலம், அரசுக்கு வருமானம் கிடைக்கலாம். ஆனால் தங்க இறக்குமதி குறையுமா என்பது சந்தேகமே. இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என நினைக்கின்றனர். உண்மையும் கூட, சர்வதேசப் பொருளாதார சூழ்நிலைகளில் கருமேகங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க சீன வர்த்தகப் போர், இந்திய அமெரிக்க பொருட்களின் மீதான வரிவிதிப்புகளில் சில இன்னல்கள், இந்தியாவிற்கு சாதகமாக எண்ணெய் வழங்கும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள், ஐரோப்பிய யூனியனில் பிரச்சினைகள் – இவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தொய்வு எற்பட்டுள்ளதை நேரடி மற்றும் மறைமுக வரி வசூல்கள் பிரதிபலிக்கின்றன. ழுனுஞ 5.8 சதவீத அளவிற்கே உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டால் இது வளர்ச்சியே அல்ல. பணவீக்கம் 3 சதவீதமென கணக்கிடப்பட்டாலும், உணவுப் பணவீக்கம் 6-7 சதவீத அளவிலேயே உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் தெளிவு என்னவென்றால், உணவைத்தவிர மற்ற பொருட்களுக்குத் தேவை குறைந்துள்ளது. தற்போது நிலவி வரும் வறட்சி, விவசாயத்துறையில் நிலவிவரும் ஸ்திரமற்ற தன்மை முதலியவை உணவுப் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். தேவைக்குறைவால் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் வாராக்கடன் அளவு கூடியுள்ளது. வங்கிகளுக்குப் புத்துயிர் ஊட்ட
‘ 70,000 கோடியை அரசு பொதுத்துறை வங்கிகளில் மூலதனமாக செலுத்துகிறது. இந்த
‘ 70,000 கோடியை, வெளிநாட்டு கடன் பத்திரங்கள் மூலம் பெறப் போகிறது.
உள்நாட்டுக் கடன்களை செலுத்த முடியாதபோது, நாம் அதிக அளவில் பணத்தை அச்சடித்து ஓரளவு சமாளிக்கலாம். பணவீக்கம் அதிகரிக்கும். ஆனால் வெளிநாட்டுக்கடனை செலுத்தத் தவறினால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படும். இவ்வாறு வெளிநாட்டுப் பத்திரங்கள் மூலம் பெறப்படும் தொகை உற்பத்தித் துறைக்குப் பயன்படுத்தப்பட்டால், அது சிறந்த பொருளாதார நடவடிக்கையாக அமையும். அதைத்தவிர்த்து, கடன்களை அடைப்பதற்காக உபயோகித்தால், வருங்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க நேரிடும்.
சுயசார்பு பொருளாதாரமாக இருந்த இந்தியாவை உலகமயமாக்கல் என்ற மாயையில் சிக்கவிட்டு, அனைவரையும் கடனாளிகளாக்கிவிட்டது. 100 ரூபாய்க்கு காய்கறி வாங்குபவர்கள் கூட கடன் அட்டையை நீட்டுகிறார். அதையும் பல தவணைகளில் அசுர வட்டியுடன் திரும்பச் செலுத்துகிறார்கள். எந்த ஒரு உலகப் பொருளாதார நெருக்கடியிலும் சிக்காத இந்தியா, வருங்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படும் நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

Tagged with