எஸ்.ஏ. போப்டே : உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதி

எஸ்.ஏ. போப்டே : உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் (46-ஆவது) 2018 அக்டோபரில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2019 நவம்பர் 17-உடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ. போப்டே (47-ஆவது தலைமை நீதிபதி) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2019 நவம்பர் 18 அன்று பதவியேற்கிறார். இவரது பதவிக்காலம் வரும் 2021 ஏப்ரல் 23 அன்று முடிவடையும்.

எஸ்.ஏ. போப்டே பற்றிய சில தகவல்கள் :

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1956-இல் பிறந்த இவர், நாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.

கடந்த 1978-இல் மகாராஷ்டிர வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்த எஸ்.ஏ. போப்டே, மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2000-இல் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2012 அக்டோபரில், மத்தியப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2013 ஏப்ரலில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஆதார் தொடர்பான வழக்கு உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்துள்ளார்.

ஆதார் இல்லை என்பதற்காக அரசின் சேவைகளை மறுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்விலும், தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் இவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2013 முதல் பதவி வகித்த நீதிபதிகள் :