வனவிலங்குகள் சம்பந்தமான குற்றங்கள்

வனவிலங்குகள் சம்பந்தமான குற்றங்கள்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

2018-ஆம் ஆண்டு வனவிலங்குகள் சம்பந்தமான மனிதர்கள் செய்த 388 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 123 குற்றங்கள் புலிகள் மற்றும் சிறுத்தைகள் சம்பந்தப்பட்டவை. இதில் 81 சிறுத்தைகள் மற்றும் 42 புலிகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள். மீதமுள்ளவற்றில் பட்டியலிடப்பட்ட பறவைகளும் அடங்கும். ஐந்தில் இரண்டு பங்கு அதாவது 388-இல் 259 இரண்டு மிருகங்கள் மட்டுமே சம்பந்தபட்டவை. சிறுத்தைகள் 21%, பட்டியலிடப்பட்ட பறவைகள் 16%, மற்றும் புலிகள் 11% அதற்கு அடுத்தப்படியாக வரிசையில் நிற்பவை நட்சத்திர ஆமைகள் 10%, மான்கள் 9%.

பத்து இனங்கள் 90% சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. அவைகளில் முதல் ஐந்து – யானைகள் (7%), பாம்புகள் (5%), காண்டாமிருகங்கள் (4%), கீரிகள் (4%), எறும்புண்ணிகள் (4%-க்கு சற்று குறைவு). மீதமுள்ள 10 சதவீதத்தில் குரங்குகளும் அடக்கம். 2016-இல் 565 ஆக இருந்த வனவிலங்கு குற்றங்கள் 2018-இல் 388 ஆக குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதே. வனவிலங்குகளைக் காப்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்கள் Development of Wildlife Habitats’ (வனவிலங்கு உரைவிடங்களை அபிவிருத்தி செய்தல்), Project Tiger (புலிகள் பாதுகாப்புத்திட்டம்), Project Elephants (யானைகள் பாதுகாப்புத்திட்டம்). இதற்காக மாநில அரசாங்கங்கள் மத்திய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெறுகின்றன.