சமீபத்தில் கண்டறியப்பட்ட வெள்ளை குள்ள நட்சத்திரம்

சமீபத்தில் கண்டறியப்பட்ட வெள்ளை குள்ள நட்சத்திரம்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

இன்றிலிருந்து 4.5 பில்லியன் மனித ஆண்டுகளில் சூரியனிலுள்ள எரிபொருள் தீர்ந்துவிடும்போது அது ஒரு வெள்ளை குள்ள (White dwarf) நட்சத்திரமாக மாறிவிடும். அந்த சமயத்தில் தன் அருகாமையிலுள்ள, மெர்குரி, வீனஸ், புவி ஆகிய மூன்று கோள்களையும் அது விழுங்கிவிடும். வெள்ளை குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி எந்த ஒரு கிரகமும் இருக்க முடியாது என்ற கோட்பாட்டை, சமீபத்தில் கண்டறியப்பட்ட WDJ0914 + 1914  என்ற வெள்ளைக் குள்ளன் முறியடித்துள்ளான். இந்தப் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு வெள்ளைக் கோள் 10 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது என்பதை வார்விக் மற்றும் வால்பரைசோ பல்கலைக்கழகங்கள் கண்டுபிடித்துள்ளன. இதைச் சிலி (Chile) நாட்டிலுள்ள வானியல் ஆய்வகமும் உறுதி செய்துள்ளது.

இதுவரை வெள்ளை குள்ளர்களைச் சுற்றி சிறிய எரிநட்சத்திரங்கள் மட்டுமே சுற்றிவரும் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு பொய்யாக்கியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அறிவுறுத்தும் உண்மை, வெள்ளை குள்ளர்களை கோள்களும் சுற்றி பரவலாம் என்பதே. எனவே பூமியின் வயது 45 பில்லியன் ஆண்டுகளையும் தாண்டி நிற்கும்.