கர்னல் – நெல் வைக்கோலை அழுத்தப்பட்ட உயரி-எரிவாயுவாக மாற்றும் ஆலை அமையுமிடம்

நெல் வைக்கோலை அழுத்தப்பட்ட உயிரி-எரிவாயுவாக ( CBG–Compressed Bio–Gas ) மாற்றும் இந்தியாவின் முதல் ஆலை ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள கராண்டா கிராமத்தில் அமையவுள்ளது.இந்த உயிரி-எரிவாயு வாகனங்களில் எரிபொருளாகவும், சமையல் எரிவாயுவாகவும் பயன்படுத்தப்படும். இந்த ஆலை 2020-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது ஆண்டு ஒன்றிற்கு 20,000 ஏக்கரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வைக்கோல்களை எரிவாயுவாக மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆலை அஜய் பயோ எனர்ஜி பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தால், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் தொடங்கிய ஊக்ஷழு குறித்த ’ SATAT’(Sustainable Alternative Towards Affordable Transportation ) திட்டத்தின்கீழ் நிறுவப்படும்.