ரம்யா ஸ்ரீ கண்டன் – தென்னிந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர்

ரம்யா ஸ்ரீ கண்டன் – தென்னிந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர்

தென்னிந்தியாவில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்குட்பட்ட விமான நிலையங்களில் முதலாவதாகவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மூன்றாவது பெண் தீயணைப்பு பணியாளராகவும், ரம்யா ஸ்ரீ கண்டன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் 2019 நவம்பர் 1 அன்று விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பணியில் சேர்ந்தார். கேரளத்தின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் இவர், கட்டமைப்பு பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். இந்தப் பணியில் சேருவதற்காக புதுடெல்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் பயிற்சியை மேற்கொண்டார். எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு முன்னோடியாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கடந்த ஆண்டில் ’தனியா சன்யால் என்ற முதல் பெண் தீயணைப்புப் பணியாளரை பணியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.