ஆனந்தன் – உலக ராணுவப் போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழக வீரர்

ஆனந்தன் – உலக ராணுவப் போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழக வீரர்

கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன் கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இவர் காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பிரிவில் 2008-ஆம் ஆண்டு பாதுகாப்பு பணியில் இருந்தபோது கண்ணிவெடித் தாக்குதலில் தனது இடதுகாலை இழந்தார். பின்னர் செயற்கைக் கால் பொருத்தப்பட்டு நடைப்பயிற்சியும், வேகமாக ஓடும் பயிற்சியையும் மேற்கொண்டார். பின்னர் மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள ராணுவ விளையாட்டுப் பயிற்சியகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்நிலையில் சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7-ஆவது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகளப் போட்டியில் ஆனந்தன் கலந்துகொண்டார். இதில் ஊனமுற்றோர் பங்கேற்கும் பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் முதலிடத்தைப் பெற்று 3 தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றினார்.