ரஞ்சன் கோகோய் : சமீபத்தில் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

இந்தியப் பாராளுமன்றம் இரு அவைகளை (மக்களவை, மாநிலங்களவை) கொண்டது. மாநிலங்களவையில் 250-க்கும் மிகாமல் உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நியமன உறுப்பினர் பதவி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசியல் சாசன சட்டத்தின் 80-ஆவது சரத்தின் படி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். இவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.