கங்கா அமந்திரன் அபியான் படகுப்பயணத் திட்டம்

கங்கை நதி தொடர்ந்து மாசடைந்து வருவதால் இதனை தூய்மைப்படுத்தும் வகையில் மத்திய அரசு தூய்மை கங்கைத் திட்டத்தை (நமாமி கங்கா) 2015-ஆம் ஆண்டு தொடங்கியது.ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த தேசிய தூய்மை கங்கைத் திட்டமானது கங்கை அமந்திரன் அபியான் (GAA – Ganga Amantran Abhiyan)” என்ற திறந்தவெளி படகுப்பயணத்தை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயணமானது தேவபிரயாக் (உத்தரகண்ட்) மற்றும் கங்கை சாகர் (மேற்கு வங்காளம்) ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்பட்டது. தேவபிரயாக் என்பது அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆகிய இரண்டு நதிகள் சந்திக்கும் இடமாகும். மேலும் கங்கை சாகர் நதியானது சுந்தரவன காடுகளின் ஒரு பகுதியாகும்.