கட்சிரோலி மூங்கில்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் விளையும் மூங்கிலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ள முயற்சி நடைபெற்று வருகிறது என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

விமானத்துக்காக உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கட்சிரோலி மாவட்டத்தில் மூங்கில்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மூங்கில்களைப் பயன்படுத்தி விமான எரிபொருள் தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இனி அதற்கான முயற்சி தீவிரப்படுத்தப்படும். விரைவில் உயிரி எரிபொருள் மூலம் விமானம் இயக்கப்படும்.