இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு எப்போதும் கண்டிராத புதிய உச்சமாக 56.071 கோடி டாலராக (ரூ. 42.05 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது : இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது அக்டோபர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 18 கோடி டாலர் அதிகரித்து 56.071 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய வாரத்தில், 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 541 கோடி டாலர் அதிகரித்து 56,053 கோடி டாலராக காணப்பட்டது.

செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு வாரத்தில் 81 கோடி டாலர் உயர்ந்து 51,834 கோடி டாலராக இருந்தது.

அதே சமயம், தங்கத்தின் கையிருப்பு 60 கோடி டாலர் குறைந்து 3,626 கோடி டாலரானது.

சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 60 லட்சம் டாலர் குறைந்து 148 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 2.5 கோடி டாலர் சரிந்து 464 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.