ஜூனியர் பிரிவு : இந்திய வம்சாவளி வீரர் சாம்பியன்


விம்பிள்டன் டென்னிஸ் விபோட்டியில் ஆடவர் ஜூனியர் பிரிவில் இந்திய வம்சாவளி அமெரிக்கரான சமீர் பானர்ஜி சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில் அவர் சக அமெரிக்கரான விக்டர்லிலோவை வீழ்த்தினார். இது சமீருக்கு 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். முன்னதாக பிரெஞ் ஓபன் ஜூனியரில் பங்கேற்ற அவர், முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியிருந்தார். தற்போது ஜூனியர் உலகத் தரவரிசையில் 19-ஆவது இடத்தில் இருக்கிறார் சமீர்.