மெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ள இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத்து வாகன வடிவமைப்புப் போட்டி

முழுவதும் சுரங்கப்பாதை வழியாக சக்கரங்கள் இன்றி அதிவேகத்தில் வழுக்கிச் செல்லக்கூடிய வடிவம் கொண்ட புல்லட் ரயில் போன்ற போக்குவரத்து வாகனங்கள் ’ஹைப்பர் லூப் என அழைக்கப்படுகின்றன.

ஹைப்பர்லூப் என்பது காற்றே இல்லாத குழாய் வழியாக மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய போக்குவரத்து வாகனமாகும். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்தை மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைந்துவிட முடியும். இது குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் மேலும் அதிகப்படுத்தும் வகையில், இந்தியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போக்குவரத்து வாகன வடிவமைப்புப் போட்டியை மெட்ராஸ் ஐஐடி நடத்தவுள்ளது. இப்போட்டியில் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி சர்வதேச அளவில் மாணவர் குழுக்கள் பங்கேற்கவுள்ளனர்.