சென்னையில் அமையவுள்ள NCLAT-யின் கூடுதல் அமர்வு

பொதுவாக நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT-National Company Law Tribunal)  கையாண்டு அதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்தத் தீர்ப்பாயத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கான மேல்முறையீடுகளை தீர்ப்பதற்காக 2016-ஆம் ஆண்டு தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT-National Company Law Appellate Tribunal) உருவாக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தற்போது டெல்லியில் மட்டும் உள்ளது. இதனையடுத்து தற்போது தென் மாநிலங்களின் நிறுவன விவகாரங்களுக்கென சென்னையில் அதற்கான அமர்வு உருவாக்கபடவுள்ளது. இந்த அமர்வில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கான மேல் முறையீடு தொடர்பான விவகாரங்கள் தீர்க்கப்படவுள்ளன.