மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேல் நிறுவனம் இடையிலான ஒப்பந்தம்

இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் ’நெகேவ் எனப்படும் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே 2020 மார்ச் 19 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கையகப்படுத்துதல் பிரிவு கையெழுத்திட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பாதுகாப்புப் படை வீரர்களால் உபயோகப்படுத்தப்படும் இந்த ’நெகேவ் வகையிலான துப்பாக்கிகள், தற்போது இந்திய ஆயுதப்படைகளிடம் உள்ள துப்பாக்கிகளை விட மிக துல்லியமானவை.