மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ’ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப்

கொரோனா நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கேட்கும் வகையில் ’ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப் மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மருத்துவரிடம் ஆலோசனை பெற வருபவரின் மார்பின் மீது இந்த நவீன ஸ்டெதஸ்கோப்பை வைக்கத் தேவையில்லை. அவருடைய இதயத்துடிப்பின் ஒலி, ’புளூடூத் தொழில் நுட்பம் வழியாக மருத்துவரின் ஸ்டெதஸ் கோப்புக்கு அனுப்பப்படுகிறது.

இதன்மூலம், நோயாளிக்கு அருகே மருத்துவர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நோயாளியின் இதயத் துடிப்பின் ஒலியை பதிவு செய்து வைப்பதன் மூலம் மற்ற மருத்துவர்களும் அதனை கண்காணித்து சிகிச்சையளிக்க முடியும்.