நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 11-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 11-Sep-2019
 • ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு 2019 செப்டம்பர் 10 அன்று வழங்கியது.
 • அமேசான் காடுகளில் கடந்த மாதம் எற்பட்ட காட்டுத் தீயினால் பிரேசிலின் பல நகரங்களில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 • அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகர நீதிபதியான அனுராக் சிங்காலை ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்கு மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதியாக அதிபர் டிரம்ப் நியமித்தார்.
 • அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த 42,000 பேர் இம்மாத தொடக்கத்தில் (செப்டம்பர் 1) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், உரிய ஆவணங்கள் பெற்ற பின்னர் மீண்டும் அங்கு குடியேறலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
 • கத்தாரில் நடக்கவிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 25 பேர் கொண்ட இந்திய அணியில் 4400 மீ மகளிர் தொடர் ஓட்டத்தில் ஜீனியர் சாம்பியன் ஹிமா தாஸ் இடம் பெற்றுள்ளார்.
 • ரஷ்யாவின் எக்டெரின்பர்க் நகரில் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2019 செப்டம்பர் 10 அன்று தொடங்கின. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் ஜேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.
 • பல்வேறு துறைகளில் இந்தியா-ஐஸ்லாந்து இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் குட்னி ஜோஹான்சனுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2019 செப்டம்பர் 10 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
 • பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதிக்கும் இடையே 69 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையே குழாய் அமைக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. பெட்ரோலியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளுக்கிடையே குழாய் அமைக்கும் திட்டம், தெற்காசிய நாடுகளிலே இதுவே முதலாவதாகுமம். இந்த பெட்ரோலிய குழாயை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியும் 2019 செப்டம்பர் 10 அன்று திறந்து வைத்தார்.
 • ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் ‘கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 • சென்னைத் துறைமுகத்தில் உள்ள டி.பி.வேர்ல்டு என்ற முதலாவது முனையத்துக்கு 2019 செப்டம்பர் 8 அன்று 9,365 பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்த மிகப் பெரிய கப்பலான ‘எம்.வி.சிஎம்ஏ சிஜிஎம் ரோன்’ வந்தது. கப்பல் போக்குவரத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘சிஎம்ஏசிஜிஎம்’ இப்பெரிய கப்பலை இயக்கி வருகிறது.
 • தமிழக முதல்வர் பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொண்ட பயணத்தின்  மூலமாக ‘ 8,835 கோடிக்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.