நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 12-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 12-Sep-2019
  • கால்நடைகளில் எற்படும் நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் மோடி 2019 செப்டம்பர் 11 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2024-க்குள் ஆடு, மாடு செம்மறியாடு, எருமை, பன்றி உள்ளிட்ட 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. 2025-க்குள் கால்நடைகளில் ஏற்படும் புரூசெல்லா நோயைக் கட்டுப்படுத்துவதும், 2030-க்குள் அந்நோயை முற்றிலுமாக ஒழிப்பதுமே இத்தடுப்பூசித் திட்டத்தின் நோக்கமாகும்.
  • விவசாயிகளுக்கு மாதந்தோறும் ‘ 3 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கும் மத்திய அரசு திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இது வரை 38 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • 2020-ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் 2019 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் படித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2-ஆம் இடத்தையும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இப்பட்டியலில் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
  • தமிழகத்தில் முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பில், சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
  • ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா 2019 செப்டம்பர் 11 அன்று பதவியேற்றார்.
  • புதிதாக பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வரும் நிலையில் தற்போது இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுள்ள மனிதர்களால் இயக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (எம்.பி.ஏடிஜிஎம்) ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 2019 செப்டம்பர் 11 அன்று ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அனைத்து இலக்குகளையும் இந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
  • பிரிட்டனில் பயிலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய விசா விதிகளை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக முன்னாள் அமைச்சரவைச் செயலர் பி.கே. சின்ஹா 2019 செப்டம்பர் 11 அன்று நியமிக்கப்பட்டார்.
  • சீனா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் தொடரும் நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 16 வகைப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
TNPSC Group 2 Previous Year Question Papers
Advertisement