சாம்பார் உப்புநீர் ஏரியில் நிகழ்ந்த பறவைகள் இறப்பு சம்பவம்

சாம்பார் உப்புநீர் ஏரியில் நிகழ்ந்த பறவைகள் இறப்பு சம்பவம்

ராஜஸ்தானிலுள்ள சாம்பார் உப்புநீர் ஏரியில் கிட்டத்தட்ட 20,000 இடம்பெயர் பறவைகள் (வலசை போகும் பறவைகள்) நவம்பர் 2019-இல் இறந்து கிடந்தது. இவைகளின் இறப்பிற்குக் காரணம் ’யஎயைே டெிவரடளைஅ என்று கூறுகிறார்கள். ’avian botulism’ என்றால் ’பறவை தாவரவியல் என்று அர்த்தம். இது ஒருவகை நச்சுப் பொருளாய் ஏற்படக்கூடியது. இது செடி கொடி விலங்குகளில் நோய் கிருமிகளால் உண்டான நஞ்சு.

’சாம்பார் உப்புநீர் ஏரி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் நகௌர் மாவட்டங்களில் 230 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1700 ச.கி.மீ இதன் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இது, இந்திய நிலப்பரப்பிற்கு இடையில் அமைந்துள்ள பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் வறண்ட நிலையில் 6 செ.மீ ஆழத்தில், அதிக மழைப்பொழிவு காலங்களில் 3 மீட்டர் ஆழத்திற்கும் தண்ணீர் இருக்கும்.

இறந்த பறவைகளில் 25 முதல் 30 வகைப் பறவைகள் இருந்தன. ’avian botulism’ காரணத்தால் 1995-97-க்கிடையில் கனடாவில் 1,00,000 பறவைகள் இறந்தன. அமெரிக்காவில் உடா (ரவயா) பச்சை உப்புநீர் ஏரியில் 1997-இல் 5,14,000 பறவைகள் இறந்துள்ளன.

முறைப்படுத்தப்படாத உப்பளங்களும் ’சாம்பார் ஏரியில் பறவைகள் இறப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். இந்த ஏரியை UNESCO, ராம்சார் அமைவிடம் என அங்கீகாரம் அளித்துள்ளது.