கீழடி அகழாய்வும் பழமையான நாகரிகமும்

கீழடி அகழாய்வும் பழமையான நாகரிகமும்

மதுரை நகரிலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் வட்டத்தில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு வடக்கில் மணலூரும், தென்கிழக்கில் அகரம் என்ற ஊரும் மேற்கில் கொந்தகையும் அமைந்துள்ளன. கீழடி கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் சுமார் 110 ஏக்கருக்கும் அதிகமான அளவில் விரிந்த நிலப்பரப்பில் பண்பாட்டுக் குவியல்களைக் கொண்ட மண்மேடு அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவின் வாயிலாக 2014-15, 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் அப்பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாநில தொல்லியல் துறையானது மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின் அனுமதி பெற்று 2017-18-இல் அங்கு அகழாய்வு பணிகளைத் துவங்கியது.

2014-இல் அகழாய்வில் கண்டறியப்பட்ட ஆதாரங்கள் :

கீழடியில் 2014-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் அங்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு மேற்கொள்ள மாநில தொல்லியல் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து மாநில தொல்லியல் துறை சார்பில் அப்பகுதியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-லிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் 2018-ஆம் ஆண்டில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4-ஆவது அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஆய்வு செய்து, அதில் கிடைத்த முடிவுகளும் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடி நாகரிகத்தின் காலம் :

கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (ஹஉஉநடநசயவநன அயளள ளயீநஉவசடிஅநவசல) ஆய்வுக்காக அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின் படி, அந்த பொருட்கள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கும், கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, கீழடியில் 353 செ.மீ ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கி.மு. 580-ஆம் ஆண்டையும், 200 செ.மீ ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கி.மு. 205-ஆம் ஆண்டையும் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இருமட்டங்களுக்கு கீழேயும், மேலேயும் பொருட்கள் இருப்பதால் கீழடியின் காலக்கட்டம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரையிலானது எனத் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

தமிழ் பிராமி எழுத்தின் காலம் :

கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஆதன், குவிரன் உள்ளிட்ட பெயர்களும், முழுமையடையாத எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இதில் ‘ஆதன்’ என்ற பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முற்கால தமிழ் பிராமி எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால் இந்தத் தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தைவையாக கருதப்படுகின்றன.

கொடுமணல், அழகன் குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின் படி, இவ்வெழுத்துகள்

கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றன. எனவே 2600 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.

கால்நடை வளர்ப்புக்கான ஆதாரங்கள் :

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு போன்ற கால்நடைகளின் எலும்புத் துண்டுகளாகும். கீழடியில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி-யில்..,

For Full Article Refer our Book: