டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏன்?

📌தமிழக அரசின் அனைத்து நிலை பணிகளுக்கும் போட்டித் தேர்வு நடத்தி, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஆட்களை தேர்வு செய்கிறது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பு கல்வி தகுதிகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது, பல லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். 

📌கடந்த, 1ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வில்கூட, 14.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இவ்வளவு பேர் பங்கேற்ற தேர்வில் கேட்கப்பட்டிருந்த இரு கேள்விகள், தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.&’பொருத்துக&’ பகுதியில், குடியரசு தினம் என கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, சரியான பதிலை பொருத்தும் வகையில், அந்த தினம் குறிப்பிடப்படவில்லை; 

📌தவறான விடை இடம் பெற்றிருந்தது. &’அடிப்படை உரிமைகள்&’ தொடர்பாக, ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வி, தமிழில், &’அடிப்படை கடமைகள்&’ என மாற்றி கேட்கப்பட்டிருந்தது. இதேபோல, துணை கலெக்டர், டி.எஸ்.பி., நிலை பணியிடங்களுக்காக, மார்ச்சில் நடந்த குரூப் 1 தேர்வில், 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. பல லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வுகளில், தவறான கேள்விகள் இடம் பெறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது;

📌தேர்வர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.குளறுபடிக்கு காரணம் குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான ரத்தினசபாபதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: 

📌வினாத்தாள் தயாரிப்பில், தேர்வாணையம் பின்பற்றும் அதிகபட்ச ரகசிய காப்பு நடைமுறைகளே, இந்த தவறுகளுக்கு காரணமாகி விடுகின்றன. 100 கேள்விகளையும் ஒரே நபர் தயார் செய்வதில்லை. பாடவாரியாக, தனித் தனியாக, பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.வரலாறு என்றால் ஒருவர், புவியியல் என்றால் ஒருவர், பொது அறிவு என்றால் ஒருவர் என, வெவ்வேறு ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வினாக்கள் தயார் செய்கின்றனர். 

📌யார், யார் வினாக்கள் தயார் செய்கின்றனர், எத்தனை பேர் தயார் செய்கின்றனர் என்ற தகவல்கள் ரகசியமானவை. வெவ்வேறு நபர்கள் தயார் செய்து தரும் வினாக்களை, தொகுத்து தரும் tkபணியை ஒருவர் செய்வார்; 100 வினாக்களை தொகுத்து தருவது மட்டுமே அவரது பணி. அப்படி, 100 வினாக்கள் மட்டுமே தயார் செய்யப்படுவதில்லை.இதுபோன்று, ஐந்து, &’செட்&’ வினாத்தாள் தயார் செய்யப்படும். 

 📌இந்த வினாத்தாள் ஒவ்வொன்றும், ஓர் உறையில் இடப்பட்டு, உறுப்பினர்கள் முன் வைக்கப்படும். அந்த ஐந்தில், ஏதேனும் ஒன்றை, உறுப்பினர்கள் தேர்வு செய்வர். உறையினுள் என்ன கேள்வித்தாள் இருக்கிறது, எப்போது தயார் செய்யப்பட்ட கேள்விகள் இருக்கின்றன என்பது, தேர்வாணைய உறுப்பினர்களுக்கோ, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கோ தெரியாது.தேர்வாகும் வினாத்தாள் கவர், நேரடியாக, அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, ரகசியம் காப்பாற்ற வேண்டியது அவர்களது பொறுப்பு. இப்படித் தான், ஒவ்வொரு நிலையிலும் ரகசியம் காக்கப்படுகிறது. 

📌அப்படிப்பட்ட நிலையில், வினா சரியானதா, விடை சரியானதா, பாடத் திட்டத்தில் இருக்கிறதா என்பதை யாரும் சரி பார்க்க முடியாது.வினாத்தாள் தயாரிக்கும் கல்வியாளர்கள், பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் தான், இத்தகைய குறைபாடுகளை களைய முடியும். தனி மனித பொறுப்புணர்வு இல்லாததே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம். இவ்வாறு, ரத்தின சபாபதி கூறினார்.குரூப் 1 தேர்வில்24 கேள்வி தவறு&’மார்ச் மாதம் நடந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்டிருந்த, 24 கேள்விகள் தவறானவை&’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், டி.என்.பி.எஸ்.சி., ஒப்புக்கொண்டது. 

 📌 &’12 கேள்விகளுக்கு தவறான விடைகள் தரப்பட்டுள்ளன.ஐந்து கேள்விகளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழு வினாக்கள் தவறானவை&’ என, டி.என்.பி.எஸ்.சி., நியமித்த நிபுணர் குழுவினர் அறிக்கை அளித்தனர்.விடைத்தாள் நகல் பெறலாம் தேர்வு முடிந்த, 48 மணி நேரத்தில், வினாக்களுக்கான சரியான விடைகளை, தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடும் நடைமுறை, 2013ல் அறிமுகம் செய்யப்பட்டது. 

📌வினா, விடை ஆகியவை தவறானவை என தேர்வர் கருதினால், தேர்வாணையத்துக்கு, ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம். தேர்வாணையம் அதை பரிசீலனை செய்து, புகார் சரியானது என உறுதி செய்தால், அந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்கி விடும்.தவறான வினாக்கள் இடம் பெற்று, அதன் மூலம் தேர்வாணையத்துக்கு தர்மசங்கடம் ஏற்படும் சூழலில், குறிப்பிட்ட அந்த வினாவை தேர்வு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

 📌குறிப்பிட்ட அந்த நபர், தேர்வாணையத்தின் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இருந்து நீக்கப்படுவார். திருத்தப்பட்ட விடைத்தாள் நகலை, தகவல் கோரும் உரிமைச் சட்டத்தின் மூலம், தேர்வர்கள் பெறவும் தேர்வாணைய விதிகளில் இடமுண்டு.பிற மாநிலங்களிலும்… &’தவறான கேள்விகள், தவறான விடைகள் இடம் பெறுவது, அனைத்து தேர்வுகளிலும் தான் நடக்கிறது&’ என்கின்றனர், கல்வியாளர்கள். 

📌நீதிபதிகளுக்கான தேர்வில் கூட,இப்படி தவறான கேள்விகள் கேட்கப்பட்டு விடுகின்றன. யு.பி.எஸ்.சி., – எஸ்.எஸ்.சி., போன்ற பணியாளர் தேர்வாணையங்கள், பிற மாநில அரசுகளின் தேர்வாணையங்களிலும், இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதை, அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.&’ ரகசியம் காப்பாற்றப்படும் அனைத்து இடங்களிலும், இதுபோன்ற தவறுகள் நடக்கவே செய்யும்&’ என்பது, அவர்களது வாதமாக உள்ளது.&’புகார் செய்யணும்&’&’விடை தவறு&’ என, தேர்வாணையத்துக்கு தேர்வர்கள், &’மெயில்&’ அனுப்பினால், அவர், உண்மையான தேர்வர் தானா என ஆய்வு செய்தபின், அவரது புகார், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்பின், தேர்வாணையம் ஒரு நிபுணர் குழு அமைக்கும். 

📌அந்த குழுவில், சம்பந்தப்பட்ட வினாவை தயார் செய்தவர் இருக்கக்கூடாது. அந்த குழு, வினா மீதான புகார் பற்றி ஆய்வு செய்யும். அதிலும், வினா தவறானது என முடிவு வந்தால், குறிப்பிட்ட அந்த கேள்விக்கு, தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு விடும்.