நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 05-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 05-Sep-2019
  • பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு 2019 செப்டம்பர் 4 அன்று சென்றார். 20-ஆவது வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டத்தையொட்டி, அவரது நினைவாக சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட ரஷ்யா முடிவு செய்துள்ளது.
  • சென்னை மற்றும் ரஷ்யாவின் – விளாடிவோஸ்டோக் துறைமுகங்கள் இடையே கடல்சார் தொலைதொடர்புகளை மேம்படுத்துவதற்காக, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
  • அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் 2019 செப்டம்பர் 3 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழகம் என்ற ஒரு காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க ‘ 2, 780 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. அதோடு வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக ‘‘யாதும் ஊரே என்ற திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி

ஏ.கே. மிட்டலை நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்க உள்ளது. 2018 ஆகஸ்ட் 12-லிருந்து தற்போது வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹலராமாணீ பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொழில் நிறுவனங்களின் மின் நுகர்வைக் குறைப்பதற்கு உதவும் வகையிலான சிறப்பு வழிகாட்டி மையத்தை சென்னை ஐஐடி அமைத்துள்ளது. தொழில் நிறுவனங்களின் மின் நுகர்வு, அதற்கான பயன்பாடு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றை எவ்வாறு குறைக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளை இந்த சிறப்பு மையம் வழங்கி வருகிறது.
  • சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ஐஎஸ்ஓ : 14001 : 2015 தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
  • பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் குருத் வாராவுக்கு இந்திய யாத்ரீகர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பயணம் செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இலங்கை தலைநகர் கொழும்புவில் யுனிசெஃப் (UNICEF – United Nations International Children’s Emergency Fund) அமைப்பு சார்பில் தெற்காசிய நாடுகளின் எம்.பி.க்களின் மாநாடு 2019 செப்டம்பர் 3 அன்று நடைபெற்றது. குழந்தைகள் உரிமைகள், மனித உரிமைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மேலும் இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து கௌரவ் கோகோய் (எம்.பி) சஞ்சய் ஜெய்வால் (எம்.பி.) உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.
  • ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகைசெய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை நிரந்தரமாக திரும்ப பெறப் போவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஹேரிலாம் அறிவித்துள்ளார்.