TNPSC குரூப் – 4 தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு

TNPSC குரூப் – 4 தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 6,491 அரசு பணியிடங்களை நிரப்ப, குரூப் – 4 தேர்வு, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், 13.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில், குடியரசு தின தேதி உட்பட, சில வினாக்கள் தவறாக இருந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. 

இந்த புகார்களை விசாரித்து, பிழைகளை சரிசெய்வதற்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது.இந்த குழுவில் இடம் பெறும், துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வினாத்தாளை ஆய்வு செய்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு அறிக்கை வழங்குவர். அதன்படி, தேர்வு எழுதியோருக்கு, உரிய மதிப்பெண் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், வினாத்தாள் தொடர்பாக, உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, அது தொடர்பாகவும், தேர்வு எழுதியோரிடம் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில், நிபுணர் குழு விசாரித்து, உரிய முடிவு எடுக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.