நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்


நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு உருவாக்கியுள்ள ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது முறையாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2019-20-ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தகுதி பெற்றுள்ளது. மகாராஷ்டிரம், ராஜ°தான் மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளன.
நதிகளைப் புனரமைத்து மீட்டெடுப்பதில் முதலிடத்தை வேலூர், கரூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன.


நீர் வளப் பாதுகாப்பு என்ற பிரிவில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்துக்கும், நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டதற்காக மதுரை மாநகராட்சிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்னும் தேசிய விருதுக்குத் தமிழகம் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் அளவில் சிறந்த ஊராட்சியாக தூத்துக்குடி மாவட்டம் சா°தாவினத்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள்
நீர்வளப் பாதுகாப்பில் சிறந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கான முதலிடம் கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன ஆராய்ச்சியாளர் ஹரி குப்புசாமிக்கும், இரண்டாவது இடம் சென்னை ஐஐடியின் டி. பிரதீப்புக்கும் மூன்றாவது இடம் சென்னை சுண்ணாம்புகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த வி.ஏ.டெக் நிறுவனத்துக்கும் கிடைத்துள்ளது.
தென்மண்டல அளவில் நீர் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பான பங்களிப்பதை அளித்ததற்காக, முதலிடத்தை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனும், இரண்டாவது இடத்தை அண்ணா பல்கலைக்கழக பேராசியர் சக்திநாதன் கணபதி பாண்டியனும் பெற்றுள்ளனர்.