பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள்

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள்

1. இ-சிகரெட் தடை மசோதா :

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே மக்களவையில் இ-சிகரெட் தடை மசோதா நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் 2019 டிசம்பர் 2 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு 2019 செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. இப்போது, அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விநியோகம், விற்பனை, இ – சிகரெட் சார்ந்த புகைப்பிடிக்கும் கருவிகள் தொடர்பான விளம்பரங்கள் ஆகியவற்றை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ‘ 1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். 2-ஆவது முறையாக அதே குற்றத்தைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ‘ 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல இ-சிகரெட் வைத்திருந்தால் ‘ 50,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இவை 2-ம் சேர்த்து விதிக்கப்படவுள்ளது.

2. எஸ்பிஜி சட்டத்திருத்த மசோதா :

முன்னாள் பிரதமர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்று வரை அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்யும் நோக்கில் சிறப்பு பாதுகாப்புப் படை (ளுஞழு ஶி ளுயீநஉயைட ஞசடிவநஉவடைிே ழுசடிரயீ) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதன்படி, பிரதமருக்கும், அவருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல் பிரதமர் பதவியிலிருந்து விலகியவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 5 ஆண்டுகள் வரை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். எஸ்பிஜி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவை நவம்பர் 27 அன்று ஒப்புதல் வழங்கியது. மாநிலங்களவையில் டிசம்பர் 3 அன்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்தையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தபிறகு இந்த மசோதா சட்டவடிவம் பெறும்.

3. வரிகள் சட்டத்திருத்த மசோதா :

பெருநிறுவனங்களுக்கான வரியை குறைக்க வகைசெய்யும் ’வரிகள் சட்டத்திருத்த மசோதா-2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நவம்பர் 5 அன்று நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு மாற்றமும் இன்றி அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

வரிக்குறைப்புக்காக முன்பு நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டத்துக்கு மாற்றாக இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

4. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா :

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த மசோதா மக்களவையில் 2019 டிசம்பர் 9 அன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா-2019 மாநிலங்களவையில் டிசம்பர் 11 அன்று நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 12 அன்று ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமலுக்கு வந்தது.

5. ஆயுதங்கள் சட்டத்திருத்த மசோதா :

ஆயுதங்கள் சட்டம் 1959-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக மூன்று துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையை இரண்டாகக் குறைப்பது, தனிநபருக்குப் பல ஆயுத உரிமங்கள் அளிப்பதற்குத் தடை விதிப்பது உள்ளிட்டவற்றுக்கு வழிவகை செய்யும் ஆயுதங்கள் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நவம்பர் 29 அன்று தாக்கல் செய்திருந்தது.

புதிய திருத்தங்களின்படி, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, ஆயுதங்கள் வைத்துக்கொள்ள சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்கள் சட்டத்திருத்த மசோதாவில் ஆயுதங்களைச் சட்டவிரோத முறையில் கடத்துவது, திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், வைத்திருப்பவர்கள் ஆகியோரைக் கண்காணிப்பதற்கும் புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்யவுள்ளது.

தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், ஆயுதச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவை டிசம்பர் 9 அன்று ஒப்புதல் வழங்கியது.

6. எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா :

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பழங்குடியினர் (எஸ்.டி.) ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசியலமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா மக்களவையில் 2019 டிசம்பர் 10 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். அதே நேரத்தில், ஆங்கிலோ இந்தியன் பிரிவினர், ’நியமன உறுப்பினர் என்ற முறையில் நியமிக்கப்படும் நடைமுறைக்கு கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

பின்னனி :

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய தலைவர்கள் முடிவெடுத்தனர். இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இப்போது மேலும் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

7. திவால் சட்டத்திருத்த மசோதா :

திவால் சட்டம் ஏற்கெனவே 3 முறை திருத்தப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்தச் சட்டத்தில் மேலும் இரு இடங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் திவாலாகும்போது, அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு திவால் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், திவாலாகும் ஒரு நிறுவனத்தை வாங்கும் புதிய நிறுவனம் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 டிசம்பர் 12 அன்று தாக்கல் செய்தார்.

8. டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நாகர்ஹவேலி ஒன்றிய பிரதேசங்களை ஒன்றிணைக்கும் மசோதா :

குஜராத் அருகேயுள்ள தாத்ரா & நாகர்ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய 2 ஒன்றிய பிரதேசங்களை ஒன்றாக இணைத்து ஒரே ஒன்றிய பிரதேசமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நாகர்ஹவேலி ஆகிய 2 ஒன்றிய பிரதேசங்களை ஒன்றிணைக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் ழு. கிஷன் ரெட்டி 2019 நவம்பர் 26 அன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதா மக்களவையில் நவம்பர் 27 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் டிசம்பர் 3 அன்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

நிர்வாக வசதிக்காக இந்த இரு ஒன்றிய பிரதேசங்களும் ஒன்றாக்கப்பட்டு ’தாத்ரா நாகர்ஹவேலி டாமன் டையூ ஒன்றிய பிரதேசம் என்ற பெயரில் அழைக்கப்படவுள்ளது. சமீபத்தில் ஜம்மு & காஷ்மீர் மாநிலமானது 2 ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதனால் ஒன்றிய பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆனது. தற்போது தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ என ஒரே ஒன்றிய பிரதேசம் உருவானால் மொத்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8-ஆகக் குறையும்.