கர்தார்பூர் வழித்தடம்

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், இறுதி காலத்தில் (சுமார் 18 ஆண்டுகள்) இங்கு வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ’தர்பார் சாஹிப்’ என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருநாட்டு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டு, இந்தியா – பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் 2018-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன.

சுமார் 4.5 கி.மீ தொலைவு கொண்ட இந்த வழித்தடம் வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள், நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில் இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டு இந்தியப் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானும் 2019 நவம்பர் 9 அன்று திறந்து வைத்தனர். பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரின் தேரா பாபா நானக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் முனையத்தையும் (ஒருங்கிணைந்த சோதனை சாவடி) திறந்துவைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து 500 யாத்ரீகர்கள் அடங்கிய முதல் குழுவையும் கர்தார்பூருக்கு வழியனுப்பி வைத்தார். முதல் யாத்திரை மேற்கொள்ளும் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்பட 500 பேர் இடம்பெற்றிருந்தனர். குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் நவம்பர் 12-இல் கொண்டாடப்பட்டதையொட்டி கர்தார்பூர் வழித்தடம் முன்கூட்டியே திறந்து வைக்கப்பட்டது.

கர்தார்பூர் திட்டம் கடந்து வந்த பாதை :