புதிய மாவட்டங்களின் எல்லைகள் : தமிழக அரசு அறிவிப்பு

புதிய மாவட்டங்களின் எல்லைகள் : தமிழக அரசு அறிவிப்பு

புதிய மாவட்டங்களின் எல்லைகள் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

5 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் :

  • விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்
  • திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம்.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம்.
  • வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம்.

அரசாணை வெளியீடு :

புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு தற்போது அம்மாவட்டங்களுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லைகளை வரையறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 32-லிருந்து 37-ஆக உயர்ந்துள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை நவம்பர் 29 அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.