நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 09-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 09-Sep-2019
  • கதிரியக்கமற்ற ஹீலியம் – 3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் அமைக்க உள்ளது.
  • முதுபெரும் வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி 2019 செப்டம்பர் 8 அன்று காலமானார். இவர்  அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், 2010-இல் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • US-ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவில் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸை (அமெரிக்கா) வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் கனடாவின் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு. அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டனில் மெட்விடேவை (ரஷ்யா) வீழ்த்தி 19-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்.
  • தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் 2019 செப்டம்பர் 8 அன்று பதவியேற்றார். அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • சூரிய மண்டலம் தொடர்பான ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து பணியாற்றப் போவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
  • பயிர்களின் நோய்த்தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே எளிதாக, துல்லியமாக கண்டறியவும் அதை சரிசெய்யவும் இயற்கை விவசாய வழிமுறைகளை உள்ளடக்கிய ‘நம்மாழ்வார் என்ற தொழில்நுட்ப செயலியை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.