நீல நீர் படை (Blue Water Force)

நீல நீர் படை (Blue Water Force)

– வீ.வீ.கே. சுப்புராஜ்

கடல்நீர் நீலநிறமாக காணப்படுவதால், இந்தியக் கடற்படையை நீல நீர் படை என்று அழைக்கிறோம். நம்முடைய நீல நீர் படை இந்தியக்கடற்கரையிலிருந்து வெகுதொலைவுக்குச் செல்லும்போது, அதற்குத் தேவையான எரிபொருளை வானிலிருந்தபடியே நிரப்பிக்கொள்வதற்குண்டான வசதிகளைப் பெற்றுள்ளது. இந்த வசதி வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்துவந்த நிலையில் இப்பொழுது நமது இந்தியக் கடற்படையும் பெற்றுள்ளது.

இந்த மாதிரியான சாகசங்களில் ஈடுபட முடியும் என்பதால் நம்முடைய இந்தியக் கடற்படை பழுப்பு நிற நீர் படையிலிருந்து நீல நீர் படையாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த தளவாடங்கள், கண்காணிப்பு, இணையதள வசதிகள் தேவை. இந்த மாதிரியான அமைப்பை ஏற்படுத்தும்போது, நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக மட்டுமில்லாது, வேறுபல தேசிய குறிக்கோள்களுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் நமது நீல நீர் படை உபயோகமாக இருக்கும். கடற்படைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை பழுப்பு நிற நீர் படை (கடலோரம்)(Brown Water Force), பச்சை நிற நீர் படை (அதிக தூரம் செல்லக்கூடியவை) ( Green Water Force ), நீல நிற நீர் படை (மிக அதிக தூரம் செல்லக்கூடியவை) (Blue Water Force). ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.