நவம்பர் 08

நவம்பர் 08
  • 1960 – அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜான் எப். கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 43 வயதிலேயே உயர்ந்த பதவியை அடைந்தவர் என்பதோடு அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க ஜனாதிபதி என்ற பெயரையும் பெற்றார்.
  • 1674 – உலகப் புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் ஜான் மில்ட்டன் லண்டனில் காலமானார்.
  • 1944 – இந்து நேசன் என்ற பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமி காந்தன் வேப்பேரியில் ஒரு ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்த போது கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திரையுலகின் மன்னராக விளங்கிய ஆ.மு.தியாகராஜ பாகவதரும், கலைவாணர் சூ.ளு.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.
  • 1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.