டிசம்பர் 03

டிசம்பர் 03
  • 1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
  • 1884 – ராஜேந்திர பிரசாத் பிறந்தார், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி

போபால் தொழிற்சாலை விபத்து :

1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில், மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நிகழ்ந்த நச்சு வாயுக் கசிவில் 3800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். நமது நாட்டில் நடைபெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.

ராஜேந்திர பிரசாத் :

பிறப்பு : 3 டிசம்பர் 1884

இறப்பு : 28 பிப்ரவரி 1963

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1962 வரை இப்பதவியில் இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவரே.மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார்.

வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி விடுதலையானார். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற இராஜேந்திர பிரசாத் 1962 ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.