டிசம்பர் 02

டிசம்பர் 02
  • 1910 – இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் பிறந்தார்.
  • 1911 – தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைந்தார்.
  • 1988 – பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
  • 2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
  • மாசுக்கட்டுப்பாட்டுத் தினம்

இரா. வெங்கட்ராமன், (இராமசுவாமி வெங்கட்ராமன்)

இவர் 1910 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

பாண்டித்துரைத் தேவர் :

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார்.

இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவியும் நல்கியவர். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்டார். தனது திட்டத்தை 1901ஆம் ஆண்டு சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் வேண்டுகோளாக முன்வைத்தார். அம்மாநாட்டில் நான்காம் தமிழ் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இயற்றிய நூல் :

  • சிவஞானபுர முருகன் காவடிச் சிந்து
  • சைவ மஞ்சரி
  • இராஜராஜேஸ்வரிப் பதிகம்
  • பன்னூல் திரட்டு

பரிதிமாற் கலைஞர்

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர்கள் 19 பேர்களுக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களையும் 2006 டிசம்பர் 2 அன்று அரசுடமையாக்கியது.

பரிதிமாற் கலைஞரின் நூல்கள் :

ரூபவதி

கலாவதி

மான விஜயம்

தனிப்பாசுரத் தொகை

பாவலர் விருந்து

மதிவாணன்

நாடகவியல்

தமிழ் விசயங்கள்

தமிழ் மொழியின் வரலாறு.

சித்திரக்கவி விளக்கம்