அக்டோபர் 6

1889 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் வெளியிட்டார்.

ThomasEdison

முதல் நகரும் படம் வெளிவர உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த,
W.K.L. டிக்ஸன் என்பவராவார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன.

1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒரு விதப் பதிவு நாடாவைப் பயன்படுத்தி உருவப் படங்களைப் பதித்தார்.

அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஒளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும் படி செய்தார்.

முதல் முறையாக, எடிசன் கினெட்டாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச்சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாக பேசும் படங்களை வெள்ளித்திரையில் காட்டிகளிக்கச் செய்தார்.

அந்தத் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார். இந்தியாவில் 1913 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கேவால் ராஜா ஹரிச்சந்திரா வெளியிடப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x