அக்டோபர் 5

இராமலிங்க அடிகளார் : 1823 – இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளாரின் பிறப்பு.

valalaar

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தார்.

இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார்.

அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும், சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையையும், சத்திய தருமசாலையையும் அமைத்தார்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.இது ஆறு திரு முறைகளாகப் பகுக்கப்பட்டு உள்ளது.

திருவருட்பா, முதலில் இராமலிங்க அடிகளாரின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது.

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள் :
1.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி.
2.புலால் உணவு உண்ணக் கூடாது.
3.எந்த உயிரையும் கொல்லக் கூடாது.
4.சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடுகள் இருக்க கூடாது.
5.இறந்தவர்களை எரிக்கக் கூடாது. அதே சமயம் சமாதி வைத்தல் வேண்டும்.
6.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7.பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாமல் உணவளித்தல் வேண்டும்.

எழுதிய நூல்கள் :
• ஜீவகாருண்ய ஒழுக்கம்
• மனுமுறை கண்ட வாசகம்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x