அக்டோபர் 29

1929-கருப்பு செவ்வாய் என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது.

கருப்பு செவ்வாய்

1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற ஹெர்பர்ட்
ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டனர். சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்காதாயத்திற்கு மட்டுமின்றி அவற்றை மறுவிற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவும் பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் வேகமாக செல்வந்தர்கள் ஆகலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது.

1929- ஆம் ஆண்டு பங்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, பங்குகளின் விலை சரியத்தொடங்கியது.

பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்ட நாள் வரலாற்றாளர்களால், கருப்புச் செவ்வாய் என்றழைக்கப்படும். 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர்.

இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் விரைவாகத் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டனர். இதனால் பங்குகளின் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. வங்கிகளால் கடன் வழங்க இயலாததாலும் விவசாய உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை வீழ்ச்சியடைந்தன.

அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான போர்ப் பொருளாதார நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x