அக்டோபர் 24

ஐக்கிய நாடுகள் தினம் (1945),

un tk 01

ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம் ஆண்டு முதலில் பயன்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் என்ற வார்த்தை 1942 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள், அல்லது ஐ.நா. – 1919 இல் இருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகத் தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது.

தேசங்களின் அணி இரண்டாம் உலகப்போரை தடுக்கத் தவறியதால் வலிமை மிக்க ஒரு புதிய அமைப்புக்கான தேவை எழுந்தது.

இது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. 51 நாடுகளைக் கொண்ட முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10, 1946 இல், லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மத்திய மண்டபத்தில் கூடியது.

ஜூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா.வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பாட்டில் உள்ளன.

அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், Spanish (ஸ்பானிஷ்) ஆகியவை.

அரபு மொழி இவற்றில் 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது.

பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாக 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, ரஷ்சியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர்கள்.

10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே.

தற்போதைய பொதுச்செயலாளராக இருக்கும் பான் கீ-மூன் 2007 ஆம் ஆண்டில் கோபி அன்னானிடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்ட இவர் 2016 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.

இப்பதவி வகிக்க வரன்முறைகள் எதுவும் கிடையாது. எனினும் இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம்.

இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x