இலகு ரயில்பாதை (மெட்ரோ லைட்)

இலகு ரயில்பாதை
தாம்பரம்-வேளச்சேரியை இணைக்கும் விதமாக, முன்மொழியப்பட்ட இலகு ரயில் (மெட்ரோ லைட்) பாதையில், நவீன தொழில்நுட்பத்தில் விரைவுப் போக்குவரத்து ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரப்பர் டயரில் இலகு ரயில் ஓட வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எல்லையும் விரிவடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைப் கட்டுப்படுத்தும் விதமாக, பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை வழங்க மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.


இதற்கிடையில், தாம்பரம்-வேளச்சேரி இடையே 15 கி.மீ. தூரத்துக்கு இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணியும் தொடங்கியது.
இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரியை இணைக்கும் விதமாக, முன்மொழியப்பட்ட இலகு ரயில் பாதையில் நவீன தொழில்நுட்பத்தில் விரைவுப் போக்குவரத்து ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரப்பர் டயரில் இலகு ரயில் ஓட வாய்ப்பு உள்ளது.
இலகு ரயில் தொடர்பாக நிலையான விவரக் குறிப்புகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், இலகு ரயில் இயக்க செலவு குறைவாகும்.
தாம்பரம்-வேளச்சேரியை இணைக்கும் 15 கி.மீ. கொண்ட இலகு ரயில் சேவை திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. நகர உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த சி°த்ரா எம்விஏ ஆலோசனை நிறுவனத்தின் சாத்தியக்கூறு செலவு, கட்டுமான காலம், நன்மைகள் ஆகியவை தெரியவந்துள்ளது.
இலகு ரயில் தொடர்பாக நிலையான விவரக் குறிப்பின்படி, இலகு ரயில்களில் அதிகபட்சமாக 12 டன் சுமையை ஏற்றிக் கொள்ளலாம். அதாவது, 2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பயணிகளின் சுமையை ஏற்றிகொள்ளும் திறன் உடையது. பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் தேவையான அனைத்து நவீன வசதிகளைக் கொண்டிருக்கும்.