TNPSC HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) TO THE POST OF GROUP-II A SERVICES. | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.08.2017 அன்று முற்பகல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுள் தொகுதி II-அ [நேர்காணல் அல்லாத பதவிகள்]-ல் அடங்கிய 1953 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application number)/பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு 02.08.2017ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயர் விண்ணப்ப எண் (Application number) தேர்வுக் கட்டணம் (ரூபாய்) கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / வங்கி வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி: நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். தேர்வு கட்டுபாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TNPSC HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) TO THE POST OF GROUP-II A SERVICES.
Subscribe
0 Comments
Oldest