17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது. அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது. மனிதநேய மையம் இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.
17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு
Subscribe
0 Comments