TN-TET Exam : TET 2 ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு..

TN-TET Exam : TET 2 ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க  ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித்தேர்வான டெட் தேர்வை எழுத 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர்.

பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை கணினி வழியில் டெட் தேர்வுகள் காலை மற்றும் மாலை என்று இருவேளைகளில் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முடிவுகளை  https://www.trb.tn.gov.in/என்ற இணைய முகவரியில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.

Tagged with