Nobel Prize 2019

Nobel Prize 2019

வேதியியலுக்கான நோபல் பரிசு :

ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கியதற்காக விஞ்ஞானி ஜான் பி குட் எனாஃப் உட்பட மூவருக்கு 2019-ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எம். ஸ்டேன்லி வைட்டிங்காம், அகிரா யோஷினோ ஆகியோர்தான் வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளப்போகும் மற்ற இருவர். ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் இந்தப் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 6.4 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுத் தொகையை இந்த மூவரும் பகிர்ந்துகொள்வர்.

மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய ’லித்தியம் – அயன் பேட்டரி என்பது எடை குறைந்த எளிதில் எடுத்துச் செல்லத்தக்க, ஆற்றல் மிக்க பேட்டரி ஆகும். அலைபேசி, லேப்டாப் முதல் எலக்ட்ரானிக் கார்கள் வரையிலான பலதரப்பட்ட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுவது இந்த லித்தியம் அயன் ரீ சார்ஜபிள் பேட்டரிதான். மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, இந்த பேட்டரிகளைப் பயன்படுத்தி, சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து வரும் மின்சாரத்தை சேமித்து வைக்கவும் முடியும்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு :

பேரண்டத்தைப் பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்படவுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பீட்பிள்ஸ், டிடியர் குவிலாஸ், மைக்கல் மேயர் ஆகிய மூவருக்கும் இந்த விருது கூட்டாக அளிக்கப்படவுள்ளது. நமது பேரண்டம் பெருவெடிப்பின் மூலம் தோன்றியது முதல், விரிவடைந்து இன்றைய நிலையை அடைந்தது வரையிலான விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுவது விண்வெளி நுண்ணலை பின்னணி கதிர்வீச்சு (காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்ரவுண்ட் ரேடியேஷன்). இது

1965-இல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்களோடு இணைந்து, பேரண்டத்தை இணைக்கும் இந்த கதிர்வீச்சு இருப்பதை கணித்தவர் பீபிள்ஸ். பேரண்டத்தில் 95 சதவீதம் நிரம்பியுள்ள இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருள் (னுயசம நநேசபல யனே னயசம அயவவநச) குறித்த ஆய்வுக்கும் பீபிள்ஸ் முக்கியப் பங்களிப்புகளை செய்துள்ளார்.

50 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரததை சுற்றிவரும் ’51 பெகாசி என்ற வாயுக் கோள் ஒன்றினைக் கண்டுபிடித்ததற்காகவே டிடியர் குவிலாஸ், மைக்கல் மேயர் ஆகிய இருவரும் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தை சுற்றிவரும் கோள் ஒன்றினை சூரியக் குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடித்தது இதுவே முதல்முறை.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு :

உடலின் உயிரணுக்கள் எப்படி ஆக்சிஜனை உணர்கின்றன, எப்படி மாறுபடும் ஆக்சிஜன் அளவுக்கேற்ப தங்களை பொருத்திக்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. வில்லியம் கேலின், சர் பீட்டர் ரேட்கிளிஃபீ, கிரெக் செமன்சா ஆகிய மூவரும் கூட்டாக இந்த நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை உடற்கூறியலுக்கான நோபல் பரிசு என்றும் அழைக்கலாம்.

பிரிட்டனின் ஃப்ரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவர் சர் பீட்டர் ரேட்கிளிஃபீ ஆவார். வில்லியம் கேலின், அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் ஆவார். கிரெக் செமன்சா, அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

New Syllabus – Model Question Papers Available