காஷ்மீர் பிரச்சினை

காஷ்மீர் பிரச்சினை

காஷ்மீர் பிரச்சினை

இந்திய சுதந்திரச் சட்டம் 1947 (Indian Independence Act 1947)-இன் படி ஆங்கில ஏகாதிபத்தியம் முடிவுக்கு வருகிறது. இந்தியா, இந்திய டொமினியனாகவும், பாகிஸ்தான் டொமினியனாகவும் பிரிக்கப்படுகிறது. மன்னராட்சிப் பகுதிகள் (Princely States) (562) இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ சேர்ந்து கொள்ளலாம் மற்றும் சேர விருப்பமில்லாதவர்கள் சுதந்திரமாக செயல்படலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேருவதற்கு முக்கியமான இரண்டு தரவுகளை, மன்னராட்சிப் பகுதிகள் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று மக்கள் பின்பற்றும் மதம், மற்றொன்று அமைவிடம். பல மன்னராட்சிப் பகுதிகள் தாங்களாகவே இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர்ந்து கொண்டன. பாகிஸ்தானுடன் 13 மன்னராட்சிப் பகுதிகள் சேர்ந்தன. ஹைதராபாத், ஜூனாகத் போன்ற பகுதிகள் ஆரம்பத்தில் முரண்டுபிடித்தாலும் பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

ஹைதராபாத் இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ள பகுதி. முஸ்லீம் மன்னர் ஹைதராபாத் நிஜாம், தன்னாட்சி பெற்று இருக்க முயற்சித்தார். ஆனால் அங்கு வசித்த இந்து மக்கள் இந்தியாவின் உதவியை நாடினர். சர்தார் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்), ராஜதந்திரமாக ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

ஜூனாகத், குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள பகுதி. அதை ஆண்ட முஸ்லீம் இளவரசர் தான் ஆட்சி செய்யும் பகுதி கடல்வழியாக, பாகிஸ்தானுக்கு அருகில் உள்ளது. எனவே,  பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமென முயற்சி மேற்கொண்டார். ஆனால் அங்கு அதிகம் வசித்த இந்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக ஜூனாகத் 1948 பிப்ரவரியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 1949 ஜனவரி 29-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

ஆனால் காஷ்மீரின் நிலைமை வேறு. இந்து அரசர், அதிக முஸ்லீம் பிரஜைகள், பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ள பிரதேசம். 1941-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77 சதவீதம் முஸ்லீம்கள் 20 சதவீதம் இந்துக்கள் 3 சதவீதம் பிற மதத்தினர் இருந்தபோதிலும் இந்தப் பிரதேசத்தை இந்து மன்னர்களே ஆண்டுவந்தனர். இதனால் இஸ்லாம் மதத்தினர் அதிக வரியை செலுத்த வேண்டி இருந்ததாகவும், அவர்கள் பிரித்துப் பார்க்கப்பட்டார்கள் எனவும் கூறப்பட்டது. மன்னராட்சிப் பகுதிகளிலேயே, அதிக பரப்பளவைக் கொண்ட சமஸ்தானம் காஷ்மீர் சமஸ்தானம் ஆகும். அதன் அரசராக இருந்தவர் மகாராஜா ஹரிசிங் ஆவார். முதலில் அவர் சுதந்திரமாகவே இருக்க விரும்பினார். மேலும் ராமச்சந்திர ஹக் என்ற தலைமை அமைச்சர் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்தார் என்பதற்காக அவரை பணிநீக்கம் கூட செய்துவிட்டார். இதைக் கண்ட பாகிஸ்தான், ஹரிசிங் இந்தியாவுடன் தான் சேர விரும்புகிறார் என்ற முடிவுக்கு வந்தது. எனவே பாகிஸ்தான், காஷ்மீரை எப்படியாவது பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டது. எல்லாவிதமான, சலுகைகளையும் அளிப்பதாக, முகமது அலி ஜின்னா, ஹரிசிங்கிற்குக் கடிதம் எழுதினார். அரசர் எதற்கும் மசியாததால், பூன்ச் பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களை கிளர்ச்சியில் ஈடுபட பாகிஸ்தான் தூண்டியது. பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி, காஷ்மீருக்குக் கிடைக்கும் உணவுப்பொருள்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு தடை விதித்தது. இதற்கிடையில் அப்துல் ஹையூம்கான் என்ற வடமேற்கு எல்லைப்பகுதியின் முதன் மந்திரி காஷ்மீரின் மீது படையெடுக்க ‘பதான்களை தூண்டிவிட்டார். ஆனால் அது பாகிஸ்தான் பிரதமர் லியாக்கத் அலிகானின் சதிவேலை என பேசப்பட்டது.

ஜம்மு பகுதியில் பிரிவினைக் கலவரம் தலைவிரித்தாட ஆரம்பித்தது. ராவல் பிண்டியிலிருந்தும், சியால்காட்டில் இருந்தும் வந்த இந்துக்களும், சீக்கியர்களும், இஸ்லாமிய அராஜகச் செயல்களைச் சுமந்துவந்தனர். ஜம்மு பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டார்கள். இரண்டு பக்கத்திலும் மகாராஜாதான் தூண்டிவிட்டு ‘தனி காஷ்மீர் (Azad Kashmir) அமைக்கப் பார்க்கிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரின் மேற்குப் பகுதிகளில், இஸ்லாமிய மாநாட்டுக் கட்சியை சார்ந்த சர்தார் இப்ராகிம் என்பவர் (Muslim Conference) 24 அக்டோபர் 1947-இல் தற்காலிக ஆசாத் காஷ்மீரை அமைத்தார். அது இன்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக அறியப்படுகிறது.

ஹரிசிங்கின் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட இருந்த நீதிபதி மெஷர் சர்த் மகாஜன் என்பவர் 19 செப்டம்பர் 1947 அன்று நேருவை டெல்லியில் சந்தித்து மகாராஜா, இந்தியாவுடன் சேர விருப்பம் தெரிவிக்கிறார் எனக் கூறினார். மேலும் பாகிஸ்தானிலிருந்து வந்து கொண்டிருந்த அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் வரத்தும் நின்றுவிட்டதால், இந்தியா உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதற்கு நேரு சம்மதம் தெரிவித்த கையோடு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். சேக் அப்துல்லா என்பவர் மன்னருக்கெதிராக சில போராட்டங்களில் ஈடுபட்டதால் அவருக்குப் பின், மன்னராட்சி முடிந்து மன்னரின் பிரதிநிதியாக (சுநபநவே) பொறுப்பை வகித்த அவருடைய மகன்

னுச. கரண் சிங் என்பவரால் சிறை வைக்கப்பட்டிருந்தவர் 29 செப்டம்பர் 1947-இல் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பழங்குடி மக்களின் படையெடுப்பு காஷ்மீரின் மேற்குப் பகுதியில் பெரிய பிரச்சினையாக அமையவே, மகாராஜா இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்டார். ஆனால் அதற்கு முன், மவுண்ட் பேட்டனின் அறிவுரைப்படி முதலில், இந்தியாவுடன் சேருவதாக கையொப்பமிட்டாலொழிய, படைகளை அனுப்புவது சாத்தியமாகாது, அது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது இந்திய ராணுவம் மவுண்ட் பேட்டன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜூன் 21, 1948 அன்று இராஜாஜி கவர்னர் ஜெனரல் பொறுப்பை ஏற்றார். அவர் 26 ஜனவரி 1950 வரை அந்தப் பதவியை வகித்தார். காஷ்மீர் பகுதியின் பிரதான அரசியல் கட்சியான ‘தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரான சேக் அப்துல்லா, மகாராஜாவை இந்தியாவுடன் சேர நிர்பந்தித்தார். அதன்படி மகாராஜா இந்தியாவுடன் சேரும் காஷ்மீர் உடன்படிக்கையில் (Instrument of Accession) 26 அக்டோபர் 1947-இல் கையெழுத்திட்டார்.

அதன்பின் இந்தியத்துருப்புகள் விமானம் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீநகர் விமான நிலையம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் 27, அக்டோபர் 1947-இல் கொண்டுவரப்பட்டது. இந்த உடன்படிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் அகற்றப்பட்டபின், மக்களின் பார்வைக்கு (சுநகநசநேஉந) ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும். மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என இந்தியா கூறியது. எனவே மகாராஜாவின் இந்த உடன்படிக்கை தற்காலிகமானது என ஒப்புக் கொள்ளப்பட்டது. சேக் அப்துல்லாவின் தலைமையின் கீழ் இருந்த ‘தேசிய மாநாட்டுக் கட்சி இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது. அதுதான் அன்று காஷ்மீரில் பெரிய அரசியல் கட்சி. இந்துக்களும், தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர்களும், ராணுவத்தாரும் ஒருங்கிணைந்து, ஸ்ரீநகர் நகரத்தை வலம் வந்தது கண் கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. ஆனால், காஷ்மீரின் வடக்குப்பகுதி கைவிட்டுப் போய்விட்டது.

வடக்கிலிருந்து பதான் பழங்குடியினரும், பாகிஸ்தான் துருப்புகளும், பாரமுல்லா பகுதியில் வேகமாக முன்னேறி வந்தனர். இந்திய ராணுவமும், தேசிய மாநாட்டுக் கட்சியினரும் அவர்களைத் துரத்தி அடித்தனர். இதுவே முதல் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.

நவம்பர் 1-ஆம் தேதி 1947 அன்று மவுண்ட் பேட்டன் லாகூருக்குப் பயணம் மேற்கொண்டு ஜின்னாவை சந்தித்துப் பேசினார். ஜூனாகத், ஹைதராபாத், காஷ்மீர் போன்ற மன்னராட்சிப் பகுதிகள் எந்த ஒரு நாட்டுடனும் சேர மறுப்பதால், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானிக்கலாம் என மவுண்ட் பேட்டன் ஒரு செய்தியை ஜின்னாவிடம் கூறினார். ஆனால் ஜின்னா அதை மறுத்துவிட்டார். இந்தியா இந்தப் பகுதிகளை நயவஞ்சகத்தனமாக தன் பக்கம் சேர்த்துக் கொண்டது என வசைபாடினார்.

1948 டிசம்பரில் நேருவும், லியாகத் அலிகானும் ஒருவரையொருவர் சந்தித்து இந்த விவகாரம் பற்றி பேசிய போது, இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குக் கொண்டுபோய் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்தனர். அதன்படி ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தீர்மானத்தைக் கோரியது. இதை சேக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார். ஐ.நா. பாதுகாப்பு சபை, இந்தியா-பாகிஸ்தான் கமிட்டி (UNCIP) ஒன்றை அமைத்து, இரண்டு நாடுகளின் படைகளும் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென கேட்டுக்கொண்டது. படைக் குறைப்புகளுக்குப் பின்னர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு (Plebiscite) நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் இருநாடுகளும் முடிவு செய்ய இயலவில்லை. இந்த வாக்கெடுப்புக்கு முக்கியத் தடையாக இருந்தது “Azad Kashmir Army” அதைக் கலைத்துவிட்டு வாக்கெடுப்பு நடத்துவதா அல்லது களைக்காமலே வாக்கெடுப்பு நடத்துவதா எனத் தெரியவில்லை. எனவே கடைசிவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. பின்னாளில் இந்தப் பேச்சு வந்த போதெல்லாம், காஷ்மீரில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன. வெற்றி பெற்ற கட்சிகள் காஷ்மீர் இந்தியாவுடனேயே இருப்பதை உறுதி செய்தன. எனவே, தனி வாக்கெடுப்பு (Plebiscite) தேவையில்லை என இந்தியா கூறிவிட்டது. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு இந்தப் பிரச்சினை கொண்டுவரப்பட்ட போதெல்லாம், அதை ரு.ளு.ளு.சு தனது ’ஏநவடி அதிகாரத்தை உபயோகித்து, இந்தியாவிற்கு சாதகமாக செயல்பட்டதை மறக்க முடியாது. இந்தப் பிரச்சினை ஐ.நா. சபைக்குச் செல்லாமல், 1947-இல் ஒரு போர் நடந்திருந்தால், ஒரு வேளை தற்போது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்திருக்கலாம்.

ஷரத்து 370 மற்றும் 35A-யைப் பற்றி பார்ப்போம். இந்தியாவுடன் இணைவதற்கு மன்னர் ஹரிசிங் சில நிபந்தனைகளை விதித்தார். காலம் தாழ்த்த விரும்பாத இந்தியா, அவைகளை ஏற்றுக் கொண்டது.  அதன் பின் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுத்து ஷரத்து 370,  17 அக்டோபர் 1949 அன்று இந்திய அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி காஷ்மீருக்கென ஒரு தனி அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு, 17 நவம்பர் 1956-இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது 26 ஜனவரி 1957-இல் அமலுக்கு வந்தது.

இந்த ஷரத்தின்படி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய மூன்று மட்டுமே இந்தியாவிடம் இருக்கும். மற்றவற்றில் இந்தியா தலையிட முடியாது. ஆனால் படிப்படியாக கடந்த 60 ஆண்டுகளில், காஷ்மீரின் தனிப்பட்ட அதிகாரங்கள் நீர்த்துப் போய்விட்டன. இந்திய அரசின்கீழ் வந்துவிட்டன. இப்பொழுது நாம் மனதில் கொள்ள வேண்டியது, 371-ஹ முதல் 371-து வரை உள்ள ஷரத்துகள் வேறு பல மாநிலங்களுக்கும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்தை வழங்குகின்றன என்பதாகும்.

ஷரத்து 370 என்பது ஆரம்பத்தில் ஷரத்து 306 A என்று தான் நமது அரசியல் சாசன சபையில் கோபாலசாமி அய்யங்கார் அவர்களால் முன் மொழியப்பட்டு, நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. ஷரத்து 370 நமது சாசனத்தில் 21-ஆம் பகுதியின் முதல் ஷரத்து ஆகும். இந்தப் பகுதியின் தலைப்பே ‘தற்காலிகம், மாற்றத்திற்குள்ளானது, சிறப்பு வாய்ந்தவை (Temporary, Transitional, Special Provisions). ஆனால் சமீப காலங்களில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில், ஷரத்து 370 தற்காலிகமானது அல்ல, நிரந்தரமானது என்றே தீர்ப்புகளை அளித்துள்ளது.

ஷரத்து 35A : இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 35ஹ என்பது ஜம்மு காஷ்மீர் தொடர்பானது. இது அடிப்படை உரிமைகளின் கீழ் வந்தாலும், ஜம்மு ு காஷ்மீர் மாநிலத்தைச் சேராத ஒருவர் தனக்கென நிலத்தை அங்கே வாங்க முடியாது. காஷ்மீரத்துப் பெண்கள் காஷ்மீரல்லாத ஒருவரை மணந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமை கிடையாது. இந்த ஷரத்து நமது அரசியல் சானத்தில் 1954-ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டது. இந்தியக் குடியுரிமை என்பது காஷ்மீர் வாழ் மக்களுக்கும் பொருந்தும் என்றாலும், காஷ்மீரில் உள்ள அரசாங்க வேலைகள் காஷ்மீரர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் போன்ற பிரச்சினைகள் எழுந்தபோது 1952 டெல்லி ஒப்பந்தப்படி 1954-இல் இந்த ஷரத்து சேர்க்கப்பட்டது. தற்போது ஷரத்து 370 நீர்த்துப்போகச் செய்யப்பட்டதன் மூலம், தானாகவே ஷரத்து 35ஹ ஆகஸ்ட் 6, 2019 அன்று நீக்கப்பட்டது. எனவே இனிமேல் காஷ்மீருக்கு எந்த வித சிறப்பு அந்தஸ்தும் கிடையாது.

இரு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இவற்றில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை இருக்கும், துணைநிலை ஆளுநர் இருப்பார். அவர் மூலமாக, காவல் துறையும், சட்டம்-ஒழுங்கு அமைதியும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். அதே சமயம், நில உரிமை, விவசாய நிலங்கள் பத்திரப்பதிவை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றுதல், விவசாயக் கடன்கள், வரிவருவாய், நில அளவை ஆகியவை தேர்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால், டெல்லியில் காவல் துறை, சட்டம் – ஒழுங்கு மட்டுமின்றி நிலம் தொடர்பான விவகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. நிலம் தொடர்பான விவகாரங்களை, டெல்லி வளர்ச்சி ஆணையம் மூலம் துணைநிலை ஆளுநர் நேரடியாகக் கவனித்து வருகிறார்.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு துணைநிலை ஆளுநர் இருப்பார். ஆனால், சட்டப்பேரவை கிடையாது. காவல் துறை, சட்டம் – ஒழுங்கு, நில விவகாரங்கள் ஆகிய மூன்றும் துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். ஜம்மு-காஷ்மீர், லடாக் இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான நீதிமன்றாக ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் இருக்கும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்புத் துறை ஆகியவை துணைநிலை ஆளுநரின் யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் வராது.

மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லடாக் என்ற யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு ு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. லடாக்கிற்கு சட்டசபை கிடையாது. ஜம்மு காஷ்மீருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உண்டு. வருங்காலங்களில் நிலைமை சீரடையும் போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் மாநில அந்தஸ்த்தை மீண்டும் பெறும். காஷ்மீர் மாநிலம் தெடார்பான ஷரத்துகள் நீக்கப்பட்டாலும் அவை சட்டப்படி சரியானவையா என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.