நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 18-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 18-Sep-2019
  • வானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா ஏவுகணை ஒடிஸா மாநிலம் பாலாசோர் கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
  • சென்னையை அடுத்த பேரூரில் ‘ 6,078 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
  • ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலான ‘காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் 2019 செப்டம்பர் 28 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்படைக்க உள்ளார். இந்திய கடற்படையில் இடம்பெறும் 2-ஆவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடி ‘ஐஎன்எஸ் கல்வாரி என்ற பெயரிலான முதல் ஸ்கார்பீன் ரக கப்பலை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
  • மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் ஐஐடி மாணவர்கள் 50 பேர் இணைந்து, புதிய மின்சார வாகனத்தை வடிவமைத்துள்ளனர். வாகன மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக அவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய பசுமை வாகனத்துக்கு ‘டெஸ்லா என பெயரிடப்பட்டுள்ளது.
  • மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் உள்ளிட்ட 11 பதக்கங்களை பெற்றனர்.
  • இஸ்ரேலில் கடந்த 5 மாங்களுக்குள் 2-ஆவது முறையாக பொதுத் தேர்தல் 2019 செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்லாகுவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், இந்த தேர்தல் தற்போது மீண்டும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
  • தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம் கொழும்பில், அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா 2019 செப்டம்பர் 16 அன்று திறந்து வைத்தார்.