நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 06-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 06-Sep-2019
 • அமெரிக்காவின் சான் ஹீசே நகரில் 2019 செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ‘டிஜிட்டல் ஊக்கமூட்டும் திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அமெரிக்க தொழில்முனைவோர் என்ற அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறவுள்ள தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதிய தொழிலுக்குத் தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழக அரசு வழங்க உள்ளது.
 • தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2019 செப்டம்பர் 5 அன்று வழங்கினார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். செல்வக்கண்ணன் மற்றும் எம். மன்சூர் அலி ஆகியோர் இவ்விருதினை பெற்றனர்.
 • தமிழக அரசின் அரசு வழக்குரைஞராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • சென்னை ஐஐடி – க்கு மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
 • இந்தியாவின் ‘கிழக்குத் தொடர்பு கொள்கையின் அடிப்படையில் கிழக்காசிய நாடுகளுடனான நல்லுறவை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்துடனான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா சார்பில் 7 ஆயிரம் கோடி கடனுதவி ரஷ்யாவுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 • பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (PNB) ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை இணைத்துக் கொள்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • சிறு வியாபாரிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டமான ‘பிரதம மந்திரியின் லகு வியாபாரி மான்தன் யோஜனா என்ற திட்டத்தை 2019 செப்டம்பர் 7 அன்று பிரதமர் நரேந்திர மொடி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், சிறிய கடைகளை நடத்துபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சில்லறை வியாபாரிகள் ஆகியோருக்கு மாதம் ‘ 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தை ஆராய ‘சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22 அன்று விண்ணில் செலுத்தியது. 48 நாள் பயணத்துக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் சந்திரயானின் லேண்டர் களம் 2019 செப்டம்பர் 7 அன்று தரையிறங்க உள்ளது.
 • பின்லாந்து நாட்டின் தொழிற்கல்வி முறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் என்பவரால் நாடுமுழுவதும் ‘சைனிக் ஸ்கூல் என்றழைக்கப்படும் ராணுவப்பள்ளிகள் துவங்கப்பட்டது. இவை 1961 முதல் மாணவர்களிடையே சிறந்த திறனை வளர்த்து அவர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையில் கல்வி அளித்து வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து மாணவிகளும் இனி ராணுவப் பள்ளிகளில் சேர்ந்து பயில வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
 • லடாக்கின் லே நகரில் நடமாடும் அறிவியல் கண்காட்சி பேருந்தை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் 2019 செப்டம்பர் 5 அன்று தொடங்கி வைத்தார்.
 • நடப்பு நிதி ஆண்டின் (2019-2020) முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) அந்நிய நேரடி முதலீடு 28 சதவீதம் உளர்ந்துள்ளது.