நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 04-Sep-2019

நடப்புக் கால நிகழ்வுகள் – Important Daily Current Affairs – 04-Sep-2019
  • ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் (IPP) வங்கியில் பணம் எடுக்கும் வசதியை தமிழக அஞ்சல் துறை 2019 செப்டம்பர் 3 அன்று அறிமுகப்படுத்தியது.
  • எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகிய நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதிக்கு ‘ 160 கோடி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 2020-22-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பங்களிப்பாக இந்த நிதி வழங்கப்பட உள்ளது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO-Word Health Organization) பிராந்தியக் கூட்டம் டெல்லியில் 2019 செப்டம்பர் 3 அன்று நடைபெற்றது. இந்தியா 2-ஆவது முறையாக இந்த கூட்டத்தை நடத்தியுள்ளது. மொத்தமுள்ள 11 தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 8 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்களும், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய நாடுகள் பிரிவு உயரதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் தலைவராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2019 செப்டம்பர் 3 அன்று பொறுப்பேற்றார். உலகில் உள்ள 109 நாடுகளைச் சேர்ந்த 115 தேர்தல் ஆணையங்கள் இணைந்து இந்தக் கூட்டமைப்பு கடந்த 2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையிடம் தென் கொரியாவில் அமைந்துள்ளது.
  • ஐ.நா. சபையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ’நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளைத் தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல்படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு ‘சர்வதேச இலக்காளர் விருதை பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கி வருகிறது. அந்த வகையில், ‘தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் மோடி அளித்த பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.
  • இந்திய மகளிர் ஒருநாள் அணியின் கேப்டனும், மூத்த வீரங்கனையுமான மிதாலி ராஜ் டி20 ஆட்டங்களில் இந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
  • 2019 ஆண்டுக்கான புக்கர் பரிசு இறுதி பரிந்துரைப் பட்டியலில் பிரிட்டன் – இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டியின் குயிச்சோட் என்ற நாவல் இடம் பெற்றுள்ளது.  இவர் ’மிட்நைட்ஸ் சில்ரன் என்ற தனது முதல் நாவலுக்காக 1981-ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது ஐடிபிஐ வங்கி கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் அந்த வங்கி ‘ 3,800 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்து உள்ளது. அவ்வங்கியின் மூலதனத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு ‘ 4,557 கோடியும், எல்ஐசி ‘ 4,743 கோடியும் வழங்க உள்ளது.
  • வண்ணத்துப்பூச்சிகளில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இறகுகளைக் கொண்ட அரிய வகைகள் உள்ளன. அவற்றில் ‘இண்டியன் பைரட் (Indian Pierrot) எனப்படும் ‘டாருகஸ் இண்டிகா (Tarucus Indica) என்ற மிகவும் அரிதான வண்ணத்துப்பூச்சி சேலத்தில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.