இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் எல்லை – காலாபாணி (Kalapani)

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும்  எல்லை – காலாபாணி (Kalapani)

– வீ.வீ.கே. சுப்புராஜ்

372 சதுர கி.மீ.  கொண்ட இப்பகுதி இந்தியாவிற்கும் நேபாளத்திற்குமிடையே பிரச்சினைக்குரிய இடமாக உள்ளது. சமீபத்தில் இந்தியா வெளியிட்ட வரைபடத்தில் இந்தப்பகுதியை இந்தியா உத்திரகாண்டின் ஒரு பகுதியாக அதனுடைய கிழக்கு எல்லையில் சேர்த்துள்ளது. இதை நேபாளம் ஆட்சேபித்துள்ளது. இதனால் நேபாளத்தில் போராட்டங்கள் கூட வெடித்தன. இந்தியாவின் இந்தச்செயலை நேபாள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியாவின் தன்னிச்சையான செயலைக் கண்டித்துள்ளன.

நேபாளத்தின் மேற்கு எல்லை 1816-இல் அப்போதைய நேபாள அரசுக்கும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் (Treaty of Saugauli) படி வரையறுக்கப்பட்டது. மக்கள் அதிகம் வசிக்காத இந்தப்பகுதியை 58 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளம் தனது மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்திருந்தது. ஆனால் நேபாள மன்னர் 1962

இந்திய – சீனப் போரின் போது நேபாள அரசர் இந்தியாவிற்கு இதை விட்டுக் கொடுத்து விட்டார் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நேபாள வெளியுறவு அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே இதை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் நேபாள பிரதம மந்திரி கே.பி. சர்மா ஒலி (Oil) இதை மறுக்கிறார். இது வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த போது, இது சம்பந்தமாக, ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தார். நேபாளத்தின் உறவு இந்தியாவிற்கு அதிகம் தேவை என்பதால் இது சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும். காலாபாணியைப் போல உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள மற்றொரு இடமான ’சுஸ்தா (Susta)வும் பிரச்சினைக்குரிய இடமாகவே உள்ளது. காலாபாணியுடன் ஒப்பிடும்போது சுஸ்தா அதிக பரப்பளவைக் கொண்டது. இரண்டுமே சுமூகமாக, தீர்க்கப்படும் என நம்பப்படுகிறது.