FORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .!புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..!

Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது.

இது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதற்காக கூடுதல் வசதியும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக புதியதாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் தயாராகி வருகிறது.மேலும் மற்ற apps-களிலுருந்து அனுப்பப்படும் தகவல்களைப் பகிரும் போது preview வை பயனாளர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

android பயனாளர்கள் மற்றும் மெசேஜ் அல்லது லிங்க் என எது அனுப்பினாலும் அதனை preview பார்க்கலாம்.இந்த புதிய அப்டேட் மூலம் பயனாளர் ஒரு செய்தியை ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவருக்கு பகிர்ந்து கொண்டாலும் Preview பார்த்துக் கொள்ளலாம். இந்த feature ஆனது வாட்ஸ்அப் மூலம் பரவுகின்ற பொய் செய்திகளைத் தடுக்க உதவி செய்யும் என்று தெரிகிறது. தற்போது அப்பேட் ஆன இந்தப் புதிய அப்டேட் உடன் கூடிய வாட்ஸ்அப் மற்றும் Google play beta programme மூலம் இதனை பதிவிறக்கம் செய்யலாம். இதனை அடுத்து எல்லோராலும் விரும்ப்படும் GIF stickers பயன்பாட்டை எளிதாக்க கூடிய முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கின்றது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x