அடல் ஓய்வுதிய திட்டம்

அமைப்புச் சாரா தொழிலாளர்கள் 60 வயதைக் கடந்தபிறகு மாதம் Rs. 1,000 முதல் Rs. 5,000 வரை பெறும் வகையில் அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் இணைபவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, வங்கி அல்லது அஞ்சலக கணக்கு மூலமாக செலுத்த வேண்டும். அரசும் தன் பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும். அரசின் பிற சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களில் பயன்பெறுபவராக இருந்தால், அவர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகைக் கிடைக்காது. இந்த திட்டத்தை ஓய்வுதிய நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA – Pension Fund Regulatory and Development Authority) நிர்வகித்து வருகிறத. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.9 கோடிபேர் இணைந்துள்ளனர். இந்த ஆண்டில் அக்டோபர் வரை மட்டும் 36 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். அதில் பொதுத்துறை வங்கிகள் மூலம் 27.5 லட்சம் பேரும், தனியார் வங்கிகள் மற்றும் இதர வங்கிகள் மூலம் 5.5 லட்சம் பேரும் இணைந்துள்ளனர். நாடு முழுவதும் அமைப்பு சாரா துறைகளில் சுமார் 45 கோடி பேர் பணியாற்றுகின்றனர். அடுத்த ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தில் 2.20 கோடிபேரை இணைக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.